தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் விரும்புவார்கள். அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் முன்புதிவு இன்று தொடங்கியது. நவம்பர் 9ம் தேதிக்கான பாண்டியன் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2ம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2ம் வகுப்பு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. வைகை, திருச்செந்தூர், குருவாயூர் விரைவு ரெயில்களில் மட்டுமே 2ம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் உள்ளன. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.