
இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் உலக சாதனையைச் சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்…
ரியாத்: உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடர் இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது இதில் பெண்களுக்கான 49 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 120 கிலோ எடையைத் தூக்கி சீன வீராங்கனையான புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் இந்திய வீராங்கனை மீராபய் சானு, 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில், 119 கிலோ தூக்கியதே சாதனையாக இருந்தது.
தற்போது அதனை முறியடித்துச் சீன வீராங்கனை புதிய உலக சாதனை படைத்துள்ளார். சீனாவின் மற்றொரு வீராங்கனையான ஹூ ஜிஹுய் ஸ்னாட்ச் பிரிவிலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் (95 கிலோ +120 கிலோ) 215 கிலோ எடையைத் தூக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இது முந்தைய சாதனையை (213 கிலோ) விட இரண்டு கிலோ அதிகமாகும்.

