நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சிவப்பு நிற பிளாலெஸ் மாடர்ன் கவுன் அணிந்து எடுத்துக் கொண்டுள்ள போட்டோ ஷூட், தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
எந்த ஒரு சினிமா பின்னணியுமின்றி, தன்னுடைய திறமையால் மட்டுமே இன்று திரையுலகில் உயர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் சினிமா பயணம், சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளினியாகத் துவங்கியது.
பின்னர் மானாட மயிலாட நிகழ்சியில், டான்சராகக் களமிறங்கி திறமையை நிரூபித்த ஐஸ்வர்யா ராஜேஷ், திரைப்படங்களில் ஏதாவது கதாபாத்திரம் நடிக்கக் கிடைக்குமா எனப் பல சினிமா கம்பெனியில் ஏறி இறங்கியபோது, ஒரு சில படங்களில் ஹீரோயின் தோழி, மற்றும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் கதாபாத்திரங்கள் கிடைத்தன.
மேலும் தன்னுடைய குடும்ப பொறுப்பையும் தோளில் ஏற்றிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த அறிமுக படமாக அமைத்தது, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ‘அட்டகத்தி’ திரைப்படம்.
இதைத் தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது காக்கா முட்டை தான். வெற்றிமாறன் தயாரித்த இப்படத்தை மணிகண்டன் இயக்கினார். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடித்திருந்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… தொடந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய அழகை மெருகேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு, வருகிறார். அந்த வகையில் ரெட் ரோஸ் போல் சிவப்பு நிற உடையில் காற்றில் ஆடையைப் பறக்க விட்டு எடுத்துக் கொண்டுள்ள போட்டோஸ் விரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

