Divorce case:இன்றும் ஆஜராகாத தனுஷ்- ஐஸ்வர்யா! அப்போ அதெல்லாம் உண்மைதான் போல!

Advertisements

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது அவர்கள் இருவருமே ஆஜராகாததால் இந்த வழக்கு நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அத்துடன் அவருடைய முன்னாள் மருமகனும் ஆவார். அவருடைய மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அன்யோன்யமாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரெனப் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் தனித்தனியே தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களது பிரச்சினையைத் தீர்த்து அவர்களை ஒன்று சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஐஸ்வர்யாவும் தனது பெயரில் இருந்த தனுஷ் என்ற பெயரைத் தூக்கிவிட்டார். அதுபோல் தனுஷும் தனது படத்தின் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கும் அவருடைய மகன்களை அழைத்துச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகாததால் இந்த வழக்கு அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய தினமும் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இருவரும் தங்கள் மகன்களுக்காக மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தகவல்கள் கூறும் நிலையில் இவர்கள் தொடர்ந்து இரு வாய்தாக்களிலும் ஆஜராகாதது சந்தேகத்தை எழுப்புகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *