தமிழக கூட்டணி Climax.. 4 முனை போட்டி; வெற்றிப் பட்டியல்…! 

Advertisements
வருகிற சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் தமிழக அரசியல் கட்சிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கூட்டணி பற்றிய குழப்பங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. வருகிற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்பதும் உறுதியாகி இருக்கிறது இதில் வெற்றி பெறப் போவது யார் என்ற தகவலும் புதிய கணக்கீடு மூலம் தெரிய வந்திருக்கிறது .
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி , தவிர தமிழக வெற்றி கழகம் , நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவும் என்பது உறுதியாகி இருக்கிறது .
கடைசி செய்தியாக தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் இணைய போகிறது என்ற தகவல் வெளிவந்தது தற்பொழுது அதற்கும் விடை கிடைத்திருக்கிறது . தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து திரை மறைவு பேச்சு நடைபெற்று வந்த நிலையில் , ஏற்கனவே திமுக கூட்டணியில் கடந்த தேர்தலின் போது 25 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு தரப்பட்டன.
தற்பொழுது 60 தொகுதிகளும் அமைச்சரவையில் பதவியும் கேட்டு காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிராக திரை மறைவில் கொடி பிடித்துள்ளது
இதன் நிமித்தமாக தமிழக வெற்றி கழகத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இது குறித்து ஏற்கனவே ராகுல் காந்திக்கு உடன்பாடு இல்லாத நிலையில் தமிழக காங்கிரசார் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.
தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தில் காங்கிரஸ் கட்சி இணைந்தால் 75 தொகுதிகள் தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் 60 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என தமிழக வெற்றி கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .இது மட்டுமல்லாமல் திமுகவை விட்டு பிரிவதற்கு ராகுல் காந்திக்கு மனம் இல்லாத முக்கிய காரணமும் பார்க்கப்படுகிறது.  எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிகிறது.
எனவே தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது . இதேபோல் அதிமுகவை பொருத்த வரையில் பாரதிய ஜனதா கட்சி தவிர அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது .
எனவே அதிமுகவை பொருத்த வரையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அன்புமணி தலைமையிலான பாமக ஆகியவை கூட்டணியாக சேர்கின்றன . அனேகமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கடைசி கட்ட முடிவுக்கு மருத்துவர் ராமதாஸ் தள்ளப்படுவார் என தெரிகிறது . இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து விட்டது. எனவே வருகிற தேர்தலில் திமுக கூட்டணியில் புதிதாக தேமுதிக இடம் பெறுகிறது .
இதற்கிடையே கடந்த தேர்தல்களில் எந்தெந்த கட்சி என்னென்ன கூட்டணிகளில் இருந்தது. அதனுடைய வாக்கு வங்கி என்ன என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது . இதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்ஆகிய கட்சிகள் முக்கிய கூட்டணியாக இருந்தன .
இதில் திமுக 37.70 சதவீத வாக்குகளை பெற்றது காங்கிரஸ் கட்சி நான்கு புள்ளி இருபத்தி எட்டு சதவீத வாக்குகளை பெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.3 சதவீத வாக்குகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.9 சதவீத வாக்குகளை பெற்றது கட்சி சைபர் புள்ளி 85 வாக்குகளை பெற்றது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சைபர் புள்ளி 48 சதவீத வாக்குகளை பெற்றது
ஆக மொத்தத்தில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 45 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது . தற்போது நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியும் அப்போது தனித்துப் போட்டியிட்டு 2.45 சதவீத வாக்குகளை பெற்றது . ஆக மொத்தத்தில் இதே கூட்டணி வருகிற தேர்தலில் போட்டியிட்டால் கிட்டத்தட்ட 48 சதவீத வாக்குகளை பெறலாம் என தெரிகிறது .
இதேபோல் அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் அதிமுக பாமக பாஜக தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் அதிமுக 33.29 சதவீத வாக்குகளை பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி 3.81 சதவீத வாக்குகளை பெற்றது பாரதிய ஜனதா கட்சி இரண்டு புள்ளி 63 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக சைபர் புள்ளி 43 சதவீத வாக்குகளை பெற்றது ஆக மொத்தத்தில் அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளை பெற்றது .
இதுவல்லாமல் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.85% வாக்குகளும் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2.4 சதவீத வாக்குகளும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது . இவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவினால் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
புதிதாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அதிகளவு வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டாலும் அது எத்தனை இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுகவும் அதிமுகவும் தான் பலம் வாய்ந்த கட்சிகளாக இருக்கின்றன . கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக 38 சதவீத வாக்குகளையும் அதிமுக 33 சதவீத வாக்குகளை பெற்றிருக்கும் நிலையில் இதர கட்சிகள் மிக குறைந்த அளவு வாக்கு வங்கிகளையே பெற்றிருக்கின்றன .
எனவே கூட்டணி கட்சிகள் வெற்றிக்கான ஒரு துணையாக இருக்குமே தவிர பலம் வாய்ந்தவையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . இதுவல்லாமல் வருகிற தேர்தலில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எப்படி அமையும் என்பதும் ஒரு முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. இது அல்லாமல் தேர்தல் கமிஷன் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் என்பதும் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்தலாம் என தெரிகிறது .
தற்போதைய சூழ்நிலையில் திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி ஆகிய இரண்டு  கட்சிகளுமே  குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி என்பது நிர்ணயமாகும் என தெரிகிறது . திமுக மற்றும் அதிமுக இடையில் இழுபறியான சூழ்நிலையை நிலவுகிறது. இன்னும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *