Digital Crop Survey: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு பணிக்குக் கண்டனம் தெரிவித்துகடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வருவாய்துறை சார்பில் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு பணிகளைக் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

குறிப்பாக இப்பணிகளைக் கிராம நிர்வாக அலுவலர்களை மட்டுமே கொண்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கும், இந்தப் பணிக்குக் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ன டிஜிட்டல் முறையில் பயிர் பயிர் ஆய்வு பணிகளைக் கிராம நிர்வாக அலுவலர்களை மட்டுமே கொண்டு முடிக்க நினைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்தப் பணிகளுக்குக் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்களை நியமிக்கக் கோரியும், அப்பணிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *