Alaska Airlines flight: நடுவானில் விமான கதவு பெயர்ந்து, பறந்ததால் பரபரப்பு!

Advertisements

விமானம் நடுவானில் 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.

போர்ட்லேண்ட்: அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 171 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகள் இருந்தனர்.

சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமானம் நடுவானில் 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.

பயணிகளில் சிலர் இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதன்பின் உடனடியாக விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக நேற்றிரவு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்தப் போயிங் ரக விமானம் இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது எனப் பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்கக் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை செய்து வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *