Dharmendra Pradhan:கையெழுத்து போட்டே ஆகணும் ‘: ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்!

Advertisements

புதுடில்லி: ‛‛தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்”, என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம்.

குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சென்றடைய வேண்டும். தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது. தமிழ் மொழியை மாணவர்கள் கற்க ஏதுவாக கடந்த ஜூலையில் தமிழ் சேனல் ஒன்று துவங்கப்பட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *