தாராபுரம் நகராட்சியில் அதிரடி..!

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், தாராபுரம் நகராட்சி பகுதிகளில் சாக்கடை வசதி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருள்கள் விவாதிக்கப்பட்டன.

தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொத்தம் 63 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, நஞ்சியம்பாளையத்தில் உள்ள வளமீட்பு மையத்தில்  உலர் கழிவுகள் பேலிங் செய்து சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பப்படுகிறது.

இதில், மூன்று மாத காலத்திற்கு பழைய விகிதத்திலேயே பணி நீட்டிப்பு வழங்க 5 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்திற்கு மன்ற அனுமதி கோரப்பட்டது. இக்கூட்டத்தில், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்களில் 27 பேர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *