மடிக்கணினி பொழுதுபோக்கிற்கு அல்ல..!

இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினிகளை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தாமல், கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஐடிஐ கார்னர் அருகில் உள்ள அரசு கல்லூரியில், கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி முதல்வர் புஷ்பலதா தலைமையில் நடைபெற்றது. விழாவில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி பங்கேற்று மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர், விழாவில் பேசிய அமைச்சர்  இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினிகளை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தாமல், கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், திமுக மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *