“எப்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” – தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்!

‘கேப்டன் மில்லர்’ என்ற சிறந்த தமிழ் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், விருது பெற்ற பின்னர் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய விருது கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றும் தனுஷ் தெரிவித்தார். மேலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலேயே இந்த அங்கீகாரம் சாத்தியமானது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தனுஷிடம், “எப்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்கள்?” என அரசியல் தொடர்பான கேள்வியை எழுப்பினர். இந்தக் கேள்விக்கு தனுஷ் எந்த பதிலும் தெரிவிக்காமல், புன்னகைத்தபடியே ரியாக்ஷன் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தனுஷின் இந்த புன்னகை ரியாக்ஷன், அவர் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலாக சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *