திமுக-வின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்கில் கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைத்தளப் பதிவில், மதச்சார்பின்மை, சமூகநீதி, ஊழலில்லாத நிர்வாகம், பெண்கள் பாதுகாப்பு’ ஆகிய கொள்கைகளில் எந்த சமரசமும் இல்லாமல், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்றவுடன் மிகவும் பின்தங்கிய மக்கள், விளிம்புநிலை மக்கள் உட்பட அனைவரின் சமூகநீதி நலனுக்கு அடித்தளமான சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாததால், ஆபாச பேச்சுகள், அவதூறு தாக்குதல்கள் ஆகியவற்றை ஒரே வேலையாகச் செய்துவருகிறது திமுக என்று தெரிவித்துள்ளார்.
திமுக-வின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்கில்கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். திமுக செய்த அனைத்து மக்கள் விரோத அரசியலும் அம்பலப்பட்டு நிற்பதாகவும், குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழல், முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் ‘மக்கள் நலனே முதன்மை’ என்று சொல்லும் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில், 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று தவெக கூட்டணி அடையும் என்று தெரிவித்துள்ளார்.


