
குடிநீர் வசதி செய்து தரக் கூறி பேரூராட்சி அலுவலகத்தில் முறையிடச் சென்ற துப்புரவு பணியாளர்களிடம் கோவத்தில் கலெக்டரை பாரு, ஸ்டாலின் பாரு, யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு என்று கூறி திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் துப்புரவு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் நிபந்தன். இவர் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவராகப் பொறுப்பு வைக்கிறார்.
இந்நிலையில் அவரது ஒன்பதாவது வார்டில் துப்புரவு பணியாளர்களுக்குக் குடியிருப்பதற்காகப் பேரூராட்சி சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்வதற்காகப் பணிகள் நடைபெற்றபொழுது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் துப்புரவு பணியாளர்கள் குடியிருக்கும் பகுதிக்குக் குடிநீர் வழங்க முடியாத நிழை ஏற்பட்டதால், குடிநீர் வழங்கிட கோரி துப்புரவு பணியாளர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் முறைவதற்காகச் சென்றபொழுது, தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக உள்ள நிபந்தன் தங்களிடம் முறையிட வந்த துப்புரவு பணியாளர்களிடம் கோபத்தில் கலெக்டர பாரு, ஸ்டாலினை பாரு, நீங்க யார வேணாலும் பாருங்க, நாங்க நினைத்தால் நோட்டீஸ் கொடுத்து எல்லாத்தையும் வெளியேற்றுவேன், உங்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், என் திமிரை நான் காட்டுவேன், கோட்டர்ஸ்ல துப்புரவு பணியாளர்களைத் தவிர்த்துக் குடியிருக்கும் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவேன், நீ சட்டம் பேசினால் நானும் சட்டம் பேசுவேன், கோட்டர்ஸ்ல குடியிருந்திருவியா, போராட்டம் பண்ணி ஒன்னும் நடக்காது, நீங்கள் குடியிருப்பது குளத்துல எல்லாத்தையும் வெளியேற்றுவேன், எனத் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபொழுது, நாங்கள் தண்ணி தானே கேட்டு வந்தோம் என்று கூறும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பதவி வைரலாகி வருகிறது.

