Tiruvannamalai: எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு!

Advertisements

திருவண்ணாமலை மாவட்டத்தில்  காளை மாடு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்தும் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் முறையாக அனுமதி பெற்று அரசிதழில் பதிய வேண்டும் எனவும்  மேலும் நடத்தப்படும் எருது விடும் விழாவில் எவ்வாறு அரசு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் விளக்கமாக அதிகாரிகள்  எடுத்துரைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து துறை அதிகாரிகள் சார்பில் வட்டாட்சியர் தலைமையில் கலசப்பாக்கம் வட்ட  எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் காளை மாடு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்தும் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

போளூர் அடுத்த தென் மகாதேவமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமையில் அனைத்து துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு கலசபாக்கம் வட்ட எல்லைக்குட்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி காளைகள் மற்றும் மஞ்சுவிடும் திருவிழா நடத்தப்படுவதை குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலாடி, வீரளூர், சேங்கபுத்தேரி, கேட்டவரம்பாளையம், பட்டியந்தல், ஆதமங்கலம் புதூர், மேல்சோழங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த எருது விடும் விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்தில் முன்னிலை வகித்துப் பேசிய போளூர் காவல்துணை  கண்காணிப்பாளர் கோவிந்தசாமி பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அரசு விதிமுறையின் படி காலை மற்றும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில் சட்டத்திற்கு எதிராகக் கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் காளைகள் மற்றும் எருது விடும் திருவிழாவை நடத்தி வருவதால் பல சிக்கல்கள் மற்றும் இன்னல்கள் ஏற்படுவதாகவும் முறையாக மாவட்ட ஆட்சியர் அனுமதியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதியும் பெற்று நடத்த வேண்டும் எனகூறினர்.

மேலும்  அரசு  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காளை மற்றும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறையாக அனுமதி பெற்று அரசிதழில் பதிய வேண்டும் எனவும் அவற்றைப் பதிவதற்கு எவ்வாறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் மேலும் நடத்தப்படும் எருது விடும் விழாவில் எவ்வாறு அரசு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதிகளை எவ்வாறு பெற வேண்டும் எனவும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின்போது கலசப்பாக்கம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கால்நடை மருத்துவர்கள் பவித்ரா மற்றும் இளம் தமிழ் கடலாடி ஆய்வாளர் கோகுல்ராஜ் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *