Demonte Colony 2 | Arulnithi | Priya Bhavani Shankar
‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது – Demonte Colony 2 Movie
இதில், அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாரர் டைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Demonte Colony 2 | Arulnithi | Priya Bhavani Shankar

