
பாசிப்பருப்பு பாயாசம் வித்தியாசமான சுவையுடன் தை அமாவாசைக்கு நைவேத்தியமாகச் செய்யலாம். பாசி பருப்பு, பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை சேர்த்து 10 நிமிடத்தில் தயாரிக்கலாம்.
ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயாசம் வழக்கமாகச் செய்யும் பாயாசங்கள். ஆனால் பாசிப்பருப்பால் செய்யப்படும் இந்தப் பாயாசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
இதனை இந்தத் தை அமாவாசைக்கு நைவேத்தியமாகச் செய்து படைக்கலாம். அதுவும் பத்தே நிமிடத்தில் செய்து படைக்கலாம். இது உடல்நலத்திற்கும் நல்லது.
பாசி பருப்பு – ஒரு கப்
பச்சரிசி – கால் கப்
வெல்லம் – அரை கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை – கால் கப்
செய்முறை
1. முதலில் பாசி பருப்பை கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதைக் குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
2. பின்னர் சிறிது பச்சரிசியை கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
3. அப்போதே வெல்லத்தையும் உருக்கிக் கொள்ளுங்கள்.
4. பாசி பருப்பு வெந்ததும் அதில் பச்சரிசி தண்ணீரை ஊற்றிக் கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும்.
இந்த 2 கலவையையும் கெட்டியான பதம் வரும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
5. இறுதியாக நெய் விட்டு அதில் முந்திரி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அது நன்றாகப் பொரிந்து வந்ததும் பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும்.
சுவையான பாசி பருப்பு பாயாசம் ரெடி.
