Delhi: யூடியூபர்களுக்கு கடும் கட்டுப்பாடு!  

Advertisements

டீப்பேக் வீடியோக்களைச் சமாளிப்பதற்காக விதிமுறைகளை யூடியூப் கடுமையாக்கி உள்ளது. புதிய வீடியோக்களை உருவாக்குபவர்கள், ஏதேனும் மாற்றப்பட்ட அல்லது செயற்கை உள்ளடக்கத்தை வெளியிட வேண்டும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டன. இதுபற்றி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

2022 அக்டோபரில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்ப கொள்கை அடிப்படையில் சமூக ஊடகங்கள் புதிய பயனர் கொள்கையைப் புதுப்பிக்கும்படி ஒன்றிய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து யூடியூப்களில் டீப்பேக் வீடியோ மற்றும் படங்கள் வெளியாவதை தடுக்க கூகிள் நடவடிக்கை எடுத்து உள்ளது. புதிய வீடியோக்கள் பதிவிடுவதற்கான விதிமுறைகளைக் கூகிள் கடுமையாக்கி உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:
அடையாளம் காணக்கூடிய நபரின் முகம் அல்லது குரல் ஆகியவற்றை ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அல்லது பிற செயற்கை அல்லது மாற்றப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றிப் பயனர்கள் குறிப்பிட வேண்டும். ஏனெனில் டீப்பேக் போன்ற வீடியோக்கள் யூடியூப்பிலிருந்து அகற்றுவதற்கு இது உதவும்.

இது போன்ற உள்ளடக்கத்தைப் பற்றி விளக்கக் குழு மற்றும் வீடியோ பிளேயரில் உள்ள லேபிள்கள்மூலம் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்போம். இந்திய அரசுடன் நாங்கள் ஒத்துழைப்போம். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப்பேக் வீடியோக்களுக்கு எதிரான சவாலை ஒன்றாக எதிர்கொள்வதற்கும் பொறுப்பான அணுகுமுறையை உறுதி செய்வோம். ஒருவரின் முகம் அல்லது குரல் அவர்களின் அனுமதியின்றி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படும் அல்லது அவர்களைத் தவறாகக் குறிப்பிடும் சந்தர்ப்பங்களில் இதுகுறித்து உண்மை தன்மையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீப்பேக் வீடியோக்களைக் கண்டறிய சென்னை ஐஐடியில் முதல் பல்துறை மையத்தை உருவாக்க ரூ.9 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *