Pulhal Lake: உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர்: சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால் புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து 400 கனஅடியாக உள்ளது. புழல் ஏரி அதன் மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் தற்போது 3,074மி.கனஅடியாக உள்ளது.

மொத்தம் 21.20அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 20.31 அடிக்கு நீர்இருப்பு உள்ளதால் நீர்த்திறப்பு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *