Nivetha Pethuraj:போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்? தீயாய் பரவும் வீடியோ!

சோதனையின்போது காரின் டிக்கியை திறக்கச் சொல்லி நிவேதா பெத்துராஜிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை:2016-ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் காரை நிறுத்திப் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னுடைய கார் டிக்கியை திறக்க மறுத்துப் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்ஜின் காரை மடக்கிய போலீசார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்கச் சொல்லிப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், நடிகை நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோ விரைவில் வெளிவரும் அவரது தெலுங்கு படத்திற்கான புரோமோஷனுக்காகவா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 

https://x.com/sairaaj44/status/1795991445041508575

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *