Delhi:பள்ளிக்கூடம் போகப் பிடிக்கலையாம்; சின்னப்பையன் சேட்டையைப் பாத்தீங்களா!

புதுடில்லி: டில்லியில் தனியார் பள்ளி ஒன்றுக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில், 14 வயது சிறுவன் தினமும் பள்ளிக்குச் செல்வது பிடிக்காமல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

டில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதனால் புரளியென உறுதியானது.

வெடிகுண்டு மிரட்டல்
போலீசார் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுவன் பள்ளிக்குச் செல்லும் மனநிலையில் இல்லாததால் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது. தீவிரமாக விசாரணை நடத்தி வரும் டில்லி போலீசார், ‘சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என உறுதியளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *