
பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தை ஒட்டி ஏகாம்பரநாதர் கோவிலில் இன்று நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுக்கு அவர் கையாலேயே உணவு பரிமாறிப் பொதுமக்களுடன் பொதுமக்களாக அமர்ந்து உணவு அருந்தினார், மாவட்ட வருவாய் அலுவலர்கீழ் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உண்ணும் வரை ஒரு மணி நேரம் காத்திருந்து சென்ற செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவுத் தினத்தை ஒட்டித் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும் அண்ணாவின் தெருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில் பிறந்தநாள் பிறந்த இடம் ஆனா காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவுத் தினத்தை ஒட்டிச் சமபந்தி நிகழ்ச்சி அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு வேகமா நாதர் கோவில் சாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கோவிலில் வளாகத்தில் அமைக்கப்பட்ட சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுக்கு உணவு பரிமாறிப் பொதுமக்களுடன் பொதுமக்களாக அமர்ந்து மதிய உணவை உட்கொண்டனர்.
பின் மாவட்ட ஆட்சியர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் அமர்ந்து உணவு உட்கொண்ட உடன் அவர்களின் கார் ஓட்டுனரும் உதவியாளரும் உணவு உட்கொள்ள இடம் இல்லாததால் அடுத்த பந்தியில் ஓட்டுநரும் உதவியாளரும் அமர்ந்து உணவு உண்ணுவதை அறிந்ததும் கோவிலில் வாசலில் ஒரு மணி நேரமாக அமர்ந்து ஓட்டுனரும் உதவியாளரும் வந்தவுடன் அங்கிருந்து வாகனத்தில் சென்றனர்.
அரசு உயர் அதிகாரிகள் பணியாற்றுபவர்கள் அவர்களின் கீழ் பணியாற்றும் சக ஊழியர்களை மதிப்பது என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் உதவியாளர்களும் ஓட்டுனரின் உணவு உட்கொண்டிருப்பதை அறிந்ததும் ஒரு மணி நேரம் காத்திருந்து சென்ற செயல் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

