Dayanidhi Maran: மோடி தான் பெரிய ஊழல்வாதி.. தயாநிதிமாறன் கடும் தாக்கு!

Advertisements

மோடி தான் பெரிய ஊழல்வாதி, ஊழல் கட்சி பாஜக தான், ரபேல் ஊழல் செய்தது பாஜக. பாஜகவின் முகத்திரையை கிழிப்பது தான் எங்கள் வேலை அதனை எங்கள் தலைவர் செய்வாரென டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தயாநிதிமாறன்பேசினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து திமுக சார்பில் தென்னக ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மேயர் பிரியா, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பிரபுசென்னை கிழக்கு  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ்,
துணை அமைப்பாளர்கள் பகுதிச் செயலாளர்கள்மகளிர் அணியெனத் திரளானோர் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தயாநிதி மாறன்வாஷிங் பவுடர் நிர்மலா – நிர்மலா சீத்தாராமன்
தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறையென அமைப்புகளைக் கொண்டு மிரட்டுகிறார்கள்  என விமர்சித்தார்.

மோடி தான் பெரிய ஊழல்வாதி, ஊழல் கட்சி பாஜக தான்.ரபேல் ஊழல் செய்தது பாஜக.
பாஜகவின் முகத்திரையை கிழிப்பது தான் எங்கள் வேலை அதனை எங்கள் தலைவர் செய்வார்.
7 1/2லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்கள் எனச் சி.ஏ.ஏ கூறியுள்ளது.இந்த அராஜகத்திற்கு முற்றுபுள்ளி வைக்க இந்தியாக்கூட்டணி 40தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்

தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராககெஜ்ரிவலை கைது செய்த ஒன்றிய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் எனக் கூறினார்.பழிவாங்காதே பழிவங்காதே.அடக்குமுறையை ஏவாதேயெனக் கோசங்களை  எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன்:

மோடி அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது 10 ஆண்டுகள் பார்த்தோமானால் அவர் செய்த ஊழல் எல்லாம் மறைத்து ஏதோ அவர்கள் நல்லவர்கள்போல் மோடி அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது அதைப் பற்றி ஒரு விசாரணை நடக்கவில்லை.

கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் கைது செய்தார்கள்.தற்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு முதலமைச்சர் என்று கூடப் பாராமல் கைது செய்து இருக்கிறார்கள் இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஏன் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலை விசாரிக்க சிபிஐ பயன்படுத்தவில்லையெனக் கேள்வி எழுப்பினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *