டிட்வா புயல்:10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Advertisements

டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சீரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, புதுச்சேரி கிழக்கு தென்கிழக்கு 90 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதிகளில் மதிய வேளைக்கு பின்னர் தரைக்காற்று பலமாக வீசியது. இதையடுத்து, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் புழுதி காற்று வீசியது. மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *