Tea Master: சரமாரியாக வெட்டு!

Advertisements

டீக்கடை காரரை வீடு புகுந்து கத்தியால் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக வெட்டிய நபரைப் போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

வேலூர்: வேலூர் சார்பனாமேடு பில்டர்பெட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 35). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஓல்டு டவுனை சேர்ந்த கனி(எ)அருணாச்சலம் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு அப்துல்கரீம் வீட்டிற்கு சென்று அருணாச்சலம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.பணம் தர அப்துல்கரீம் மறுக்கவே ஆத்திரமடைந்த அருணாச்சலம், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அப்துல்கரீம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார்.

இதுதொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.இவர்மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்தது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. மணிவண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருணாச்ச லத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலைச் சிறையில் உள்ள அருணாச்சலத்திடம் தெற்கு போலீசார் நேற்று வழங்கினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *