Krishnagiri rape incident: முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி பாலியல் சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனால் சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கிய குற்றவாளி சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். பாலியல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அடுத்தக்கட்டத்திற்கு எப்படி செல்லும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *