அதிகம் ஊதியம் பெறுவதால் மனைவிமார்கள்மீது நீதிபதி வேதனை!
மனைவிமார்கள் வேலைக்குச் சென்று கணவரைவிட அதிகம் ஊதியம் பெறுவதால் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து அதிகரித்துள்ளதாக நீதிபதி வேதனை அடைந்துள்ளனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.பூர்ணிமா தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய நீதிபதி ஆர்.பூர்ணிமா நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கணவன் மனைவிக்குள் ஈகோ பார்ப்பதால் விவாகரத்து அதிகரித்துள்ளது. மனைவிமார்கள் வேலைக்குச் சென்று கணவரைவிட அதிகம் ஊதியம் பெறுவதால் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து அதிகரித்துள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
இம்முகாமில் 2,900-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 441 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.9 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 343-க்கு தீர்வு காணப்பட்டது.
