டிட்வா புயல்;தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு..!

Advertisements

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா’புயல் காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கில் 180 கிமீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ‘டிட்வா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகரும் போது, சூறாவளி புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம் 70 கி.மீ மற்றும் 30 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், காரைக்கால் பகுதியில் 19 செ.மீ. மழையும் மயிலாடுதுறை செம்பனார்கோயில் பகுதியில் 17 செ.மீ. மழையும் ராமநாதபுரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதியில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *