அமெரிக்க, ரஷ்ய, சீன அதிபர்கள் அடுத்த வாரத்தில் சீனாவில் சந்தித்துப் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் சென்சென் நகரில் அடுத்த வாரத்தில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைப்பின் 21 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் இடையே மூவரும் தனியாகச் சந்தித்துப் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் தரிவித்துள்ளார்.
அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இந்தச் சந்திப்பில் பேசப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


