திருச்சியில் விஜய் ரோடு ஷோவுக்கு திட்டம்!

தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வரும் 20-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரோடு ஷோ நடத்திய விஜய், அடுத்ததாக திருச்சியில் பொதுமக்களைச் சந்திக்க உள்ளார்.

இதற்காக காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோடு ஷோ செல்ல உள்ளார்.தொடர்ந்து, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 7 தளங்கள் மற்றும் 600 படுக்கைகள் கொண்ட உயர் சிகிச்சை மையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.

மேலும், பச்சிளம் குழந்தைகள் வார்டுக்குச் சென்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து சுப்பிரமணியபுரம் வழியாக ரோடு ஷோ நடத்தி ரேஸ்கோர்ஸ் சாலைக்குச் செல்லும் விஜய், அங்கு தேர்வு செய்யப்படும் இடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், தந்தை பெரியார் அரசு கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட இடங்கள் பரிசீலனையில் உள்ளன.நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 1 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் எதிர்பார்க்கப்படும் சூழலில் விஜய்யின் இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *