அமெரிக்கக் கப்பலைப் பார்த்தாலே கியூபா சரணடையும் என அதிபர் டிரம்ப் விமர்சனம்…!

Advertisements
அமெரிக்க கப்பலைப் பார்த்தவுடனேயே கியூபா அரசாங்கம் நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிவிடும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர்  டிரம்ப் உரையாற்றினார்.
அப்போது, ஈரான் போரை முடித்து விட்டுத் திரும்பும்போது அமெரிக்க கடற்படை கியூபாவைக் கைப்பற்றும் என தெரிவித்தார்.
ஈரானில் போரிடும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நாடு திரும்பும் வழியில் கியூபா நாட்டின் கடற்கரைக்கு அருகே நின்றாலே போதும் என்று கூறினார். அந்த பிரமாண்ட கப்பலைப் பார்த்தவுடனேயே கியூபா அரசாங்கம், மிக்க நன்றி, நாங்கள் சரணடைகிறோம் என்று கூறிவிடும் என விமர்சித்தார்.
மேலும், கியூபா மீது எரிசக்தி மற்றும் ராணுவ ரீதியான பல புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *