K. Annamalai: ஸ்டிக்கர் ஒட்டுவதாகத் திமுக மீது விமர்சனம்!

Advertisements

சென்னையில் வழங்கும் 6000 ரூபாய் நிவாரண நிதியில் 5,400 ரூபாய் மத்திய அரசின் பணம் அதற்கு மேல் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர் எனப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடலூர் கூத்தப்பாக்கத்திலிருந்து திருப்பாதிரிப்புலியூர் தேடி தெருவரை பாதயாத்திரை மேற்கொண்டார் அப்போது அவர் பேசுவையில்:

சரித்திர புகழ் வாய்ந்த கடலூரில் நடைபெறும் யாத்திரையில் நீங்கள் பங்கு பெறுகிறீர்கள், இந்த யாத்திரை 123 தொகுதிகள் முடிந்து 124 வது சட்டமன்ற தொகுதியில் தற்போது நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகால நரேந்திர மோடியின் ஆட்சி அனைவருக்குமான ஆட்சி இந்த ஆட்சியில் இலவச கழிவறை, இலவச எரிவாயு இணைப்பு, உள்ளிட்ட பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஹிந்தியை திணிப்பார்கள் எனதிமுக பழைய வசனத்தையே தேய்ந்த ரெக்கார்டு போல் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக மோடி அரசு காசி தமிழ்ச் சங்கம் என்ற நிகழ்ச்சி நடத்துகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழில் உள்ள திருக்குறளை 16 மொழிகளில் மொழிபெயர்த்து மோடி வெளியிட்டார். போன ஆண்டு 13 மொழிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 29 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

அதே போன்று 46 தமிழ் புத்தகங்களைப் பார்வையற்றவர்கள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி வெளியிட்டுள்ளார். 102 ஆண்டுகள் கழித்து புதிய பாராளுமன்றம் திறந்து அதனுள் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடி செங்கோலை மைய கட்டிடத்தில் வைத்துக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார். இது போன்று பலவற்றை தமிழுக்காக மோடி செய்துள்ளார்.

திமுக வழங்கும் 6000 ரூபாய் நிவாரண நிதிக்குப் பல்வேறு வகையில் போட்டோவுக்குப் போஸ் கொடுக்க வைக்கின்றனர். ஆனால் மோடி அரசு சத்தமே இல்லாமல் விவசாயிகள் கணக்கில் 6000 ரூபாய் வரவு வைக்கின்றனர். மேலும் விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு, மீனவர்களுக்குத் தனி துறை, கிசான் கடன் அட்டையெனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

இந்த மாவட்டத்தில் இயற்கை வளத்திற்கு பஞ்சமில்லை இருந்தும் எந்தவித முன்னேற்றமும் இங்கு இல்லை இங்குள்ள இளைஞர்கள் வெளியூருக்கும், வெளிநாட்டிற்கும் சென்று வேலை செய்கின்றனர். இதற்குக் காரணமான கடலூர் எம்.பி ஐ மாற்ற வேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதியா அல்லது 450 தொகுதி என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும் அதற்குத் தமிழகம் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.வேறு யாருக்கும் இல்லாத பெருமை கடலூர் எம்பிக்கு உள்ளது அதுதான் கொலைகார எம்.பி, அதுவும் பாஜக போராட்டத்திற்கு பிறகு தான் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தத் திமுக ஆட்சியில் கடலூர் எம்.பியால் உயிரிழந்த கோவிந்தராஜுக்கு நியாயம் கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்பியதுடன் அதற்கு நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நியாயம் கிடைக்கும் எனப் பேசினார்.இங்குள்ள வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதயநிதி பிறந்தநாள் அன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 622 நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

ஆனால் திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த நில் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை பெற்றுக் கொடுத்தாரா எனக் கேள்வி எழுப்பினார்.பாஜகவினர் மீது காவல்துறையினர் கை வைத்தால் பிச்சிருவோம் ஒரு உதைக்கு பத்து உதை திரும்ப வரும் அது போன்ற அரசியல் மாற்றம் வர வேண்டும். ஒருவரின் ஜாதி பெயரைச் சொல்லும் கட்சி திமுக, ஜாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக என விமர்சித்தத்துடன்

நம் கட்சி சாதாரணமானவரை உயர்த்தி ஆட்சியில் உட்கார வைப்பது தான் நம் சித்தாந்தம். அது திமுகவிற்கு ஒருபோதும் புரியாது.முதல்வர் செல்பி எடுத்தால் அந்தச் சொத்து அவருடையது, உதாரணம் சேலம் மாடர்ன் தியேட்டர் அங்குக் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும் என்கின்றனர் உங்களுக்கும் மாடர்ன் தியேட்டர்க்கும் என்ன சம்பந்தம் நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு அதிலிருந்து திமுக பின்வாங்கியது முதல்வர் செல்ஃபி எடுத்தால் கவனமாக இருங்கள் என எச்சரித்தார்.

கடலூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாள், லட்சத்தீவு நமக்குக் கிடைக்க காரணமாய் இருந்த ஆற்காடு ராமசாமி முதலியார் லட்சுமி சாமி முதலியார் போன்ற தியாகிகள் பாடப் புத்தகத்தில் வரமாட்டார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் கோவிலுக்கு வெளியே அந்த வார்த்தையோடு சிலை இருந்தால் அதை அடியோடு எடுக்கப்படும். அந்தந்த ஊரில் உள்ள பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றிற்கு அப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் வைக்க வேண்டும் அப்படி மாறுதல் வந்தால் தான் குழந்தைகளுக்கு அவர்கள்பற்றித் தெரிய வரும் இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

சென்னையில் ஃபார்முலா 1 ரேஸிற்காக 40 கோடி செலவு செய்து சாலை அமைத்தார்கள். இப்போது அந்த ரேசை வேறு இடத்திற்கு மாற்றப் போகின்றனர்.இப்போது நாங்கள் கேட்கிறோம் இது உங்க அப்பன் வீட்டு பணமா?தமிழக முதல்வர் பொய் பேசுகிறார் குறிப்பாக ஆட்சிக்கு வந்தபிறகு 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டதாகச் சொல்கிறார்.

அதே போன்று கடலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வாக்குறுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும், கொண்டாங்க ஏரி தூர்வாரப்படும், விவசாய கல்லூரி அமைக்கப்படும், கைத்தறி பூங்கா அமைக்கப்படும், மீன்வளக்கல்லூரி அமைக்கப்படும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்கள் இதில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டதா?

எனவே முதல்வர் பொய் பேசுகிறார் இந்த வியாதிக்கு நன்றாகத் தூங்க வேண்டும்.சென்னையில் வழங்கும் 6000 ரூபாய் நிவாரண நிதியில் 5,400 ரூபாய் மத்திய அரசின் பணம் அதற்கு மேல் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர் எனப் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *