Delhi Triple murder: ஒரு கொலையை மறைக்க இரு கொலைகள்!

ஒரு கொலையை மறைக்க இரு கொலைகள், முதலில் ஒருவர் கொலை. பிறகு அக்கொலையை மறைக்க இன்னொரு கொலை. ஆக இரண்டு கொலைகள். முன்னாள் கடற்படை வீரர் 2004 – ஆம் ஆண்டு செய்த குற்றங்களுக்காகக் கைது.

2004 ஆம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில் ஒரு கொலைக்காகத் தேடப்பட்டு வந்த நபர் நஜாப்கரில் வசிப்பதாக டெல்லி போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து தேடுதலில் இறங்கிய போலீசார் 60 வயதான பாலேஷ் குமார் என்பவரைக்  கைது செய்துள்ளனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர், தனது மரணமடைந்ததாகப் பொய் கூறி,  போலியான அடையாளத்துடன் வாழ்ந்து வந்த கடற்படையின் முன்னாள் ஊழியர் ஒருவர், 20 வருடங்களுக்கு முன்னர் ஒருவரை மூச்சுத் திணறடித்து  கொன்றுவிட்டு, மேலும்  இருவரைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். இதனால் விசாரணை நிலுவையில் இருந்த நிலையில் ரசிய தகவல் கிடைத்ததின் பேரில் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில் ஒரு கொலைக்காகத் தேடப்பட்ட ஒருவர் கிட்டத்தட்ட 30 கிமீ தொலைவில் உள்ள நஜஃப்கரில் வசிப்பதாக டெல்லி போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து தற்போது 60 வயதான பாலேஷ் குமார் கைது செய்யப்பட்டார். குமார் தனது பெயரை அமன் சிங் என மாற்றிக்கொண்டு வீடு, மனை, சொத்து வியாபாரியாகப் பணிபுரிந்து வந்ததாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு மூத்த அதிகாரி ரவீந்தர் யாதவ் தெரிவித்தார்.

அவரைக் கைது செய்த போலீசார், கொலைக் குற்றவாளி அவர் தானென உறுதி செய்தனர். ஹரியானவைச் சேர்ந்த குமார் 8-ஆம் வகுப்புவரை படித்துள்ளார். பிறகு கடற்படையில் 1981-ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த அவர் 1996-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பிறகு போக்குவரத்து தொழில் ஆரம்பித்து டில்லியில் உத்தம் நகரில் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். குமார் போலீசாரிடம் கூறுகையில் அவரும் அவரது சகோதரர் சுந்தர் லால் இருவரும் சேர்ந்து ராஜேஷ் என்பவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறினார். பிறகு கொலையை மறைக்க இரு வேலையாட்களை டிரக்கில் வைத்துக் கொளுத்தி விட்டு, குமார் இறந்ததாக நாடகமாடி தப்பியுள்ளார். இந்நிலையில் பெயரை மாற்றிக் கொண்டு பதுங்கி வாழ்ந்து வந்த அவரை டில்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 2004-ல் செய்த கொலைக்கு 2023-ல் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *