
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
03.09.2023 ஆவணி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை
09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )
எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே,
ராசியாதிபதி செவ்வாய் 6—ல் வலுவாக சஞ்சரிப்பதாலும், 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள்
நினைத்ததெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
உங்களது மதிப்பும், மரியாதையும்அதிகரிக்கும். பண வரவுகள் நன்றாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள்.
நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. கணவன்-
மனைவியிடையே அன்யோனியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
நீங்கள்எதிர்பார்த்த வெளி பொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும்.
வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். புதிய யுத்திகளை பயன்படுத்தி ஏற்படும்
மறைமுக பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.
வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள்கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள்நிம்மதியுடன் செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
ஒரு சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியூர்செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு இருந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும்சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடுமேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 8, 9

ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சூரியன், பஞ்சம ஸ்தானமான 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால்
வேலை பளு அதிகரித்து உங்களது ஓய்வு நேரம் குறையும்.
இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.குருபகவான் திங்கட்கிழமை முதல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள பொருளாதாரப்பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க கூடிய பலம் ஏற்படும்.
கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்தநெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் தொழில்முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் பரிபூரண வெற்றியைத் தந்துமனமகிழ்ச்சியை உண்டாக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும்.
தகுதி வாய்ந்தவேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் தற்போதைக்குஅவசரப்பட்டு மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது.
வேலைக்கு செல்பவர்களுக்குபிறரால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
சக ஊழியர்களால் ஒரு சில இடையூறுகள் இருந்தாலும் அதனை உங்களது தனித்திறமையால் சமாளிப்பீர்கள்.
வயது மூத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.
பெண்கள் வகையில்வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடுமேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 6, 7.

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி
நேயர்களே, ராசியாதிபதி புதன், சூரியன் சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் இருப்பதால் உங்களது
பலமும் வலிமையும் அதிகரிக்கும்.
நல்ல நட்புகள் உங்களை நாடி வரும். 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
நீங்கள் மனதில் நினைத்தகாரியங்கள் எல்லாம் தற்போது கை கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலமாகஅனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாகதீர்க்க முடியாமல் இருந்து வந்த ஒரு பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரத்தில் அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் தற்சமயம் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் கூட படிப்படியாக குறையும். முக்கிய முடிவுகள் எடுக்கின்ற பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.
உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்து வந்த வீண் மருத்துவ செலவுகள் குறையும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளை கூடஎளிதில் செய்து முடிக்க முடியும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனைசெய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5, 8, 9.

கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-
ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு மற்றவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக
இருக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெற முடியும்.
குரு, சனி தற்போது வக்ரகதியில்சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்ற மிகுந்தபலன்களை பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.
தொழில்,வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், கடந்த கால நெருக்கடிகள் விலகி லாபங்கள் அடையக் கூடிய அமைப்பு ஏற்படும்.
கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூக நிலை ஏற்படும். வங்கி மூலம்
பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும்.
கணவன்- மனைவிஇடையே பேச்சில் சற்று பொறுமையோடு இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
சூரியன் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. வேலைக்கு செல்பவர்களுக்கு
பணியில் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய பலமும், உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணிகளில் குறித்த நேரத்தில்
செய்து முடிக்க கூடிய பலமும் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசியில்
சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது
நல்லது.
உடன் இருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது மிக மிக நல்லது. நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கக்கூடிய நேரம்
என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்பட வேண்டும்.
திங்கட்கிழமை முதல் 9-ல் உள்ள குருவக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள்முன் நின்று செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும்.
அரசு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால்நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை ஆட்களை சற்று அனுசரித்து செல்வது மிக மிக நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். எடுத்த
காரியத்தையும் எடுத்த பணியையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க கூடிய பலம் உண்டாகும்.
அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் பணியில் சிறப்பாக செயல்பட முடியும். உடல்நலத்தில் சற்று
அக்கறை எடுத்து கொள்வது, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத்தோடு செல்வது நல்லது.
அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9.
சந்திராஷ்டமம் – 01-09-2023 காலை 09.35 மணி முதல் 03-09-2023 காலை 10.38 மணி வரை.

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும்
பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும்
கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும்.
நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாகஎடுத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்களுடைய பணியில்மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 6-ல் இருக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
பணபற்றாக்குறை ஏற்பட்டாலும் உங்களுடைய தனி திறமையால் எதையும் சமாளிப்பீர்கள் என்றாலும்
மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.
தொழில்,வியாபாரத்தில் போட்டிகள் அதிகப்படியாக இருக்கக்கூடிய நேரம் என்பதால் வேலையாட்களை நம்பாமல் ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல்
இருப்பது மிக மிக நல்லது.
வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருப்பதால் ஓய்வு நேரம்
குறைவது மட்டும் இல்லாமல் மன நிம்மதி இருக்காது. சக ஊழியரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது
நல்லது. பெருமாள் வழிபாடு மேற்கொள்வதும், லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதும் நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9.
சந்திராஷ்டமம் – 03-09-2023 காலை 10.38 மணி முதல் 05-09-2023 மாலை 03.00 மணி வரை.

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, ராசியாதிபதி சுக்கிரன்
10-ல் சஞ்சரிப்பதாலும், லாபஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம்
நடக்கும்.
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும்
இல்லாமல் உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் தற்போது படிப்படியாக குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி
ஏற்படும்.
ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து
வந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள்
எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
அரசு வழியில்நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வருகின்ற நாட்களில் பெற முடியும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்து வந்த பணியெல்லாம் கூட தற்போது முடித்து விட முடியும்.
தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் எதிலும் செயல்படுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் அனுகூலமான பலன்களும், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகமும் உண்டு.
புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 3, 4.
சந்திராஷ்டமம் – 05-09-2023 மாலை 03.00 மணி முதல் 07-09-2023 இரவு 11.13 மணி வரை.

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி
நேயர்களே, ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது பலமும்
வலிமையும் அதிகரிக்க கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன்,தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள்உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை மிக மிக சிறப்பாக இருக்கும்.
சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமை முதல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் தொழில் வியாபாரத்தில்உங்களுக்கு இருந்து வந்த தேக்க நிலை விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தற்போது குறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும்.
வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக மிக சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் தீர்க்க முடியாத பிரச்சனைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய பாராட்டுதலை பெற முடியும்.
ஒரு சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீது இருந்த
பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மன நிம்மதி ஏற்படும். பைரவர் வழிபாடு மேற்கொள்வது,
லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது மூலம் கெடுதிகள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.
சந்திராஷ்டமம் – 07-09-2023 இரவு 11.13 மணி முதல் 10-09-2023 காலை 10.25 மணி வரை.

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய யோகங்கள் உங்களுக்கு
உண்டு.
ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் இணைந்து 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின்
பொருளாதார தேவைகள் குறித்த நேரத்தில் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் மறக்க முடியாத இனிய
நிகழ்வுகள் வருகின்ற நாட்களில் நடக்கும்.
சட்ட ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது படிப்படியாக விலகி மன மகிழ்ச்சி உண்டாகும். சர்ப கிரகமான கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடக் கூடிய வாய்ப்புகள் அமையும்.
வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். ஒரு சிலருக்கு வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.
வேலைக்கு செல்பவர்களுக்கு மதிப்பு மிகுந்த பதவிகள் கிடைக்கக்கூடிய யோகமும்
விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.
அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பங்காளியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு நடந்து கொள்வது நல்லது. உடன் இருப்பவர்களிடம் பேச்சில் கவனத்தோடு இருப்பதும், உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவதும் நல்லது.
மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9.

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம்
கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும்
பொறுமையோடு செயல்படுவது நல்லது.
அலைச்சல் காரணமாக மன அமைதி குறைவு உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் குரு வரும் திங்கட்கிழமை முதல் வக்ரம் பெற இருப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் சற்று குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
பேச்சில் பொறுமையோடு இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை குறைத்துக் கொள்ள முடியும். வயது
மூத்தவர்களிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தடைப்படும்.
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று நிதானத்தோடு நீங்கள் செயல்பட்டால் போட்ட முதலை
எடுக்க முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.
வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்கள் சொல்ல வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு செயலிலும் சற்று பொறுமையோடு இருப்பது, உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.
சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது,லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 8, 9.

கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு
சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமை முதல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு இருந்த
பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதன் 7-ல்
சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும்.
பிறருக்கு தந்த வாக்குறுதிகளைகாப்பாற்ற முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி வக்ர கதியில் இருப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
தொழில், வியாபாரத்தில் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
கூட்டாளிகளை கலந்தலோசித்து செயல்பட்டால் வீண் சிக்கல்களை குறைக்க முடியும்.
அதிகமுதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமை காப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள்
ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பொதுவாக பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு
மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5.

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ருண ரோக ஸ்தானமான 6-ல்
சூரியன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய அமைப்பு என்பதால் பல்வேறு அனுகூலமான பலன்களை
பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்
கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசுகின்ற பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்க கூடிய சனி தற்போது வக்ர கதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில்
எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
வெளிநபர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முழுமையாக குறைந்து ஒரு சுமூகமான நிலை உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் பேச்சில் கவனத்தோடு இருப்பதும், உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படுவதும் நல்லது.
துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, விநாயகருக்கு சூரை தேங்காய் உடைப்பது நன்மையை தரும்.
வெற்றி தரும் நாட்கள் – 6, 7.

