London : கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.!

Advertisements

லண்டனில் நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

லண்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 170 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ராகுல், கருண்நாயர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ஆகிய நால்வர் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர்.

மற்றவர்கள் ஒற்றை இலக்கத்துடனும் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுத் தொடரில் இரண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *