
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 310 ரன்களைக் குவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் யசாஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள் எடுத்தார்.
அணித் தலைவர் சுப்மன் கில் 114 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
