Congress MP Rajmohan Unnithan: காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சால் பரபரப்பு!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சுட்டு கொல்வதற்கான நேரமிது எனப் காங்கிரஸ் எம்.பி.  பேசியது  பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

கேரளாவில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஐக்கிய முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில், காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ஜெனீவா உடன்படிக்கையின் கீழுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் மீறுபவர்களை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்கலாம்.

2-ம் உலக போருக்குப் பின்னர், போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை (நாஜிக்கள்) நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான விசாரணை நடந்தது. அப்போது, போர் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டு கொல்லும் நடைமுறை இருந்தது.

இது இஸ்ரேல் பிரதமருக்கும் பொருந்தும். உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார். பாலஸ்தீனர்கள் மீது அவருடைய படைகளை அனுப்பி அராஜகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அதனால், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் நெதன்யாகுவை சுட்டு கொல்வதற்கான நேரமிது எனப் பேசிப் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *