ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்., கூட்டணி முன்னிலை!

ராஞ்சி: 

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்., – ஜே.எம்.எம்., கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி பா.ஜ.க, தலைமையிலான தே.ஜ., கூட்டணி 31 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 48 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள, 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான இண்டியா கூட்டணி, பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி களம் கண்டன.

பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று (நவ.,23) காலை 8 மணிக்குத் துவங்கி நடந்து வருகிறது.

தற்போது, காலை 11 மணி நிலவரப்படி முன்னிலை விபரங்கள்;

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி- 48

பா.ஜ., தலைமையிலான தே. ஜ., கூட்டணி- 31

மற்றவை- 2

கடந்த 2019ம் ஆண்டுத் தேர்தல்!

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க, 25 இடங்களைக் கைப்பற்றியது. இறுதியில் கூட்டணி பலத்துடன் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *