டி20 உலகக் கோப்பை : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்.!

Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்தது. இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடிய சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்தார். இந்நிலையில், வருகின்ற 5 ஆம் தேதி நடைபெறும் 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி – இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *