
மும்பை:
மஹாராஷ்டிராவில் பா.ஜ.க, தலைமையிலான மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி, பா.ஜ.க, தலைமையிலான மஹாயுதி கூட்டணி 220 தொகுதிகளிலும், மஹா விகாஸ் அகாடி கூட்டணி 55 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. தேர்தலில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகியவை அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, பா.ஜ.க, தலைமையிலான மஹாயுதி கூட்டணி போட்டியிட்டன.
இது சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சி பிளவுபட்ட பின் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல். இதனால் முக்கியமான தேர்தலாக மஹாராஷ்டிரா மாநில அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது.
தேர்தலில், 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 66.05 சதவீதம் ஓட்டுப்பதிவானது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (நவ.,23) காலை 8 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மொத்த தொகுதிகள்- 288
தற்போது, காலை 11. மணி நிலவரப்படி முன்னிலை விபரங்கள்;
சிவசேனா, பா. ஜ.க, கூட்டணி கட்சிகள் (மஹாயுதி கூட்டணி) -220
மஹா விகாஸ் அகாடி கூட்டணி (காங்., சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு) -55
மற்றவை- 13

