Sexual Assault: கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச ‘வீடியோ’ எடுத்துத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பாகப் பொள்ளாச்சி போலீசார் முதலில் 5 பேரைக் கைது செய்த நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றபட்டது. பின்னர் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2021-ல் 9 பேர்மீது கூட்டு பாலியல் பலாத்காரம், கடத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது.

வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 9 பேரைக் கைது செய்த போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். 2 ஆண்டுகளாகக் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைதானவர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். வழக்கில் சிபிஐ சேகரித்த கூடுதல் வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்கள்குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர். விரைவில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *