Advertisements

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ எடைதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ராஜா முத்துப்பாண்டியின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இவரது வெற்றி இளைஞர்களிடையே புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என நம்புவதாகக் கூறினார். அவர் மேலும் பல சாதனைகளைப் படைத்து, இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisements




