நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா – எம்.பி ஜிதேந்திர சிங் தாக்கல்!

நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பொதுதேர்வு முறைகேடுகளை தடுப்பதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

நாடளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது.  அப்போது, நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்தார்.

 

வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான மோசடிகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளது. திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறையும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கான மசோதவை தாக்கல் செய்தார்.

மழைக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியபோது, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் திருத்த மசோதா, 2026-க்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தேர்வு சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்த மசோதா உள்ளது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *