
கோவையில் 17 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 7 தனியார் கல்லூரி மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு, சிறுமியைக் குனியமுத்தூரில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவருக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுமி வீடு திரும்பாததால், அவரது பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியைத் தேடி வந்தபோது, மறுநாள் அவர் வீட்டிற்கு வந்தார். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்பது தெரியவந்தது. உக்கடம் காவல் துறையினர் 7 மாணவர்களுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
