Coimbatore – Pollachi Train: நாளை ரயில் சேவை துவக்கம்!

Advertisements

கோவை-பொள்ளாச்சி இடையே ரயில் சேவை நாளை துவக்கி வைக்கிறார்  மத்திய மந்திரி எல்,முருகன்.

இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிதாக இயங்கும் ரயில் சேவையானது கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும். அதே சமயம் மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும்.

இச் சேவையாது வரும் டிசம்பர் 24 -ஆம் தேதி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் வழக்கமான சேவை இயக்கப்படும். இதில் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06421) போத்தனூருக்கு காலை 5.35 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு காலை 5.54 மணிக்கும், பொள்ளாச்சிக்கு காலை 6.25 மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் (எண் 06422) கிணத்துக்கடவுக்கு இரவு 9.18 மணிக்கும், போத்தனூருக்கு இரவு 9.44 மணிக்கும் கோவைக்கு இரவு 10.15 மணிக்கும் வந்தடையும்.

இதுபோல் ஏற்கனவே கோவை-பொள்ளாச்சி இடையே வாரத்தின் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர) இயக்கப்படும் முன் பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06419/06420) திங்கள்கிழமை முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *