Advertisements
இன்றைய ராசிப்பலன் – 17.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்
வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
புது பதவிகள் தேடி வரும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.
ரிசபம்
சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.
அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
வேலைச்சுமை இருக்கும்.
மிதுனம்
புதிய இடம் வாங்குவீர்கள்.
செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.
வெளி இன மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.
கடகம்
பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள்.
சிம்மம்
சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.
துலாம்
எதிர்பாராத பயணங்கள் உண்டு.
பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
விருச்சிகம்
தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.
தனுசு
பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்குக் கூடும்.
மகரம்
புது வேலைக் கிடைக்கும்.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
அரசால் அனுகூலம் உண்டு.
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்.
கும்பம்
திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.
இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
வியாபாரம் செழிக்கும். அதிக லாபத்தினை பார்ப்பீர்கள்.
எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும்.
மீனம்
தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.
அரசியலில் செல்வாக்கு உயரும்.
அலைச்சல் அதிகரிக்கும்.
பேச்சில் கடுமை காட்டாதீர்கள்.