திருக்கோவிலூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, ரூபாய் 59-கோடியே 4-லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள, கூடுதல் கட்டடங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப்விஜய் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு, ரூபாய் 59-கோடியே 4-லட்சம் செலவில், கூடுதல் கட்டடங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதனை முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தவாறு காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இதன் மூலம் திருக்கோவிலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.


