நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு முடிவு!

தமிழகக் கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சர் பிரபு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையக் கட்டிடங்களை அமைச்சர் பிரபு, ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் பிரபு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் இயற்கை வளங்கள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் பற்றுடனும், பாசத்துடனும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும் என உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *