திமுக முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், துரைமுருகனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறாயில் ஆயிரக்கணக்கான கோடிகள் முறைகேடு செய்திருப்பதாக எ.வ.வேலு மீதும் பகிர் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….
தேன் எடுத்தவன் புறங்கைய நக்காமலா இருப்பான்னு சொலவடை சொல்லுவாங்க… அதையே கோடிக்கணக்குல பணம் புழங்குற துறையில இருக்கிறவன் அதுல சுரண்டாமலா இருப்பான்னு கொஞ்சம் மாத்திக்கிடலாம் போல… அந்த அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில பல்வேறு துறைகள்ல ஊழல் நடந்திருக்கிறதாச் சொல்லி அதற்கான எதிர்வினை ஆற்றத் தொடங்கி இருக்கு ஜோசப் விஜய் அரசு….
இதுல இப்போதைக்கு முதல்ல மாட்டியிருக்கிறது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… தனியார் பள்ளிகளுக்கான அங்கிகாரம் பெற்றுத் தர்றதா 400 கோடி ரூபா மோசடி செஞ்ச வழக்குல அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருக்காரு… அதோட மட்டுமில்லாம இப்போ நூலக புத்தகக் கொள்முதல் முறைகேடு விஸ்வரூபமெடுத்திருகிறதால, அன்பில் மகேஷுக்கும் சிக்கல்னுதான் சொல்லுறாங்க…
இவருக்கு அடுத்ததா திமுக ஆட்சியில மணல் குவாரிகள்ல ஆயிரத்து 427 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்தது தொடர்பா முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செஞ்சிருக்கு..அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த எஸ். தமிழ்செல்வன் மற்றும் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மேல
அமலாக்கத்துறையில கொடுத்த புகார்களின் அடிப்படையில, அமலாக்கத்துறை பரிந்துரை செஞ்சதத் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இந்த வழக்கைப் பதிவு செஞ்சிருக்காங்க. திமுகவோட இரண்டு முன்னாள் அமைச்சர்கள் இப்படி சிக்கியிருக்காங்களேன்னு திமுக தலைமை தொடங்கி திமுக கூடாரம் முழுக்கவே வெலவெலத்துப் போயிருக்கிற இந்த நேரத்துல, இந்தாப்பிடி அடுத்த விக்கெட்டுங்கிற மாதிரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அஞ்சாயிரம் கோடி ரூபாய் ஊழல் செஞ்சிருக்கிறதா அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கு….
தமிழ்நாடு முழுசும் சுமார் எழுபதாயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள தமிழக அரசோட நெடுஞ்சாலைத் துறை பராமரிக்குது.
இந்த சாலைகள்ல ஏற்படுற சின்னச் சின்ன பள்ளங்கள், விரிசல்கள சரிசெய்ய, ‘அவசரத் தேவை’ அடிப்படையில மாவட்டப் பொறியாளரே ஒப்பந்தங்கள கொடுக்கலாம். 10 லட்சம் ரூபாய்க்குக் கீழான பேட்ச் வொர்க் ஒப்பந்தங்கள அவரே கையெழுத்திட்டு கொடுக்கலாங்கிரதால, கடந்த ஐந்தாண்டுகள்ல இஷ்டத்துக்கு ஒப்பந்தங்கல கொடுத்துருக்காங்க… இஷ்டத்துக்கும் அடிச்சிருக்காங்க…
அதே மாதிரி பெரிய கோயில்கள்ல திருவிழாக்கள் வரக்கூடிய நேரங்கள்ல , கோயிலைச் சுற்றியிருக்கும் சாலைகள்ல் ‘பேட்ச் வொர்க்’ செய்றது வழக்கம். 20 கோடி ரூபாய்க்கு மேல்வரும் அந்த வேலைகள சிறு சிறு பகுதிகளா உடைச்சி, மாவட்டப் பொறியாளரே கையெழுத்திட்டு பணி ஆணைகள வழங்கியிருக்காங்க… ஆனா எந்த வேலையும் செய்யாமலேயே வேலை செஞ்சதா கணக்கு காட்டி பணத்தை எடுத்திருக்காங்க…
அதுமட்டுமில்லாம சாலை போடப் பயன்படுத்துறா தாரோட தரத்தையும் குரைச்சி அதுலயும் முறைகேடு செஞ்சிருக்காங்க…
இப்படி ஒட்டுப் போடுரதுலயே திமுகவோட ஐந்தாண்டு கால ஆட்சியில அஞ்சாயிரம் கோடி ரூபாய்க்கு மேல முறைகேடு செஞ்சிருக்காங்க…
இந்த ஊழலை எல்லாம் நெடுஞ்சாலைத் துறையோட பொறியாளர்களூம் ஊழியர்களூம்தான் புட்டு புட்டு வச்சிருக்காங்களாம்.
அதனால முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான இடங்கல்ல அதிரடியா ரெய்டு நடத்தி அவரோட கைக்கு எப்பவேனாலும் காப்பு மாட்டப்படலாம்..



