இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையிலான உறவுக்கு எல்லையே கிடையாது என்று மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் ரோமில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியாவின் அறிவுத்திறனும், இத்தாலியின் தொழில்முனைவுத் திறனும் ஒன்றையொன்று மிகச்சிறப்பாக செய்யக்கூடியவை என்று கூறினார். நாம் இன்று ஒரு வலுவான உறவை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.
தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இத்தாலிய மண்ணில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். இந்தியா உலகின் மருந்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தியா, இத்தாலியிலும் உலகின் பிற பகுதிகளிலும் முதலீடு செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும் இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையிலான உறவுக்கு எல்லையே கிடையாது என்றும் கூறியுள்ளார்.

