மாணவர்களுக்கு திரௌபதி முர்மு அறிவுரை!

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களே முக்கிய உந்துசக்தியாகத் திகழ்வார்கள் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது, உலகத்தரம் வாய்ந்தக் கல்வி நிறுவனங்கள், இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றும், தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவும் என்று தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறினார். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களே முக்கிய உந்துசக்தியாக இருப்பார்கள் என்றும் கூறினார். இந்தியா உலகின் மிகப்பெரிய இளம் மக்கள் தொகையை கொண்டிருப்பதோடு, வலுவான திறமையாளர்களை கொண்ட நாடாகவும் திகழ்வதாகத் தெரிவித்தார். இளைஞர்கள் சமூகம் மற்றும் நாட்டின் மீது தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், தொழில்முறை வெற்றியை பெறுவதுடன், மற்றவர்களிடம் அனுதாபத்துடனும் அறநெறியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *